யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வைரல் வீடியோ காட்சிகள்...

published 1 year ago

யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வைரல் வீடியோ காட்சிகள்...

கோவை: யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமியின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார் பள்ளி மாணவி  யானைகளைப் பற்றி அபாரமாக பேசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

எந்த கோவிலுக்கு  போனாலும் முதலில் விநாயகரை கும்பிடுவோம் விநாயகர் யானை ரூபம்  கொண்டவர் யானையை நாம் பாதுகாக்க வேண்டும்.. யானை காட்டை உருவாக்குகிறது காடு நன்றாக இருந்தால் மற்ற விலங்குகளை நன்றாக இருக்கும் மற்ற விலங்குகள் நன்றாக இருந்தால் பறவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் பறவை  நன்றாக இருந்தால் மழை பெய்யும் நன்றாக மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும் விவசாயம் இருந்தால் சாப்பாடு நமக்கு கிடைக்கும் சாப்பாடு இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது ஆகவே  யானை நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறது நாம் அனைவரும் சேர்ந்து யானைகள் பாதுகாப்போம் என தெரிவித்தார். மேலும் யானையை பாதுகாப்போம் என அனைவரையும் உறுதி மொழியையும் எடுக்க வைத்துள்ளார்.

தற்போது அச்சிறுமி பேசிய காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோ காட்சிகளை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

 

https://youtu.be/wWzyJ3h5fbM?si=nTJEY_1nBUGYAcZ4

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe