பிரசவ வார்டில் அனுமதியின்றி நுழைந்த சுகாதார துறை அதிகாரி- மருத்துவர்கள் போராட்டம்...

published 1 year ago

பிரசவ வார்டில் அனுமதியின்றி நுழைந்த சுகாதார துறை அதிகாரி- மருத்துவர்கள் போராட்டம்...

கோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் 150 கிகும் மேற்பட்ட டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ரவி  கூறியதாவது…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை பிரசவ வார்டில் கர்ப்பிணி பெண் சிகிச்சையின் போது இறந்து விட்டார்.இது குறித்த மருத்துவ அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் இடமும், அரசுக்கும் அனுப்பிய நிலையில், மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வினோத் என்பவர் 5 நபர்களுடன் கர்ப்பிணி பெண்கள் அதிகம் சிகிச்சை பெற்று வரக்கூடிய வார்டுக்குள் நுழைந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் அங்கு இருந்த சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களை போட்டோ,வீடியோ எடுத்துள்ளார்.அதேபோல் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய கூடிய நர்சுகளை மிரட்டி சென்றுள்ளார்.இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் இடம் புகார் தெரிவித்துள்ளோம்.தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தற்போது குறைந்த டாக்டர்கள் மட்டுமே வேலை செய்வதாகவும், ஒரு நாளைக்கு 70 பிரசவங்கள் நடைபெறுகிறது, அதில் 25 பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடைபெறுவதாக கூறினார். தற்போது அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe