கோவையில் பிடிபட்ட வெள்ளை நாகம்- வீடியோ காட்சிகள் உள்ளே!

published 1 year ago

கோவையில் பிடிபட்ட வெள்ளை நாகம்- வீடியோ காட்சிகள் உள்ளே!

கோவை: சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கிருப்பதை பார்த்துள்ளார். பின்னர் உடனடியாக வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரரான மோகன் என்பவரை அழைத்து, தண்ணீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதனை தெரிவித்துள்ளார் . மோகன் அந்த அந்த பாம்பை பார்க்கும் போது  தான் அந்த பாம்பானது அரிதாக வனப்பகுதியில் உலா வருகின்ற வெள்ளை நாகம் என்பது தெரியவந்தது.

பார்சியல் ஆல்பினோ என்ற மரபணு குறைப்பாட்டால் இந்த பாம்பானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கப்படும்.  பின்னர் அந்த இரண்டடி நீளம் கொண்ட பாம்பு, பிடிக்கப்பட்டு பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் நாகப்பாம்பு பிடிபட்டது. தற்போது மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டிருக்கின்றது…

பாம்பை பிடிக்கும் காட்சிகளை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/z_H7iY9-15Q?si=f4fnEaRqt0DwhHNY

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe