ப்ரோஜோன் மாலுக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை..! எதற்கு தெரியுமா?

published 1 year ago

ப்ரோஜோன் மாலுக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை..! எதற்கு தெரியுமா?

கோவை: சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை Prozone மால் சேதப்படுத்தியதாகவும் அதற்கான அபராதத்தினை செலுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி பொறியாளர் Prozone மாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21க்கு உட்பட்ட சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலினை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் சேதப்படுத்தி உள்ளதாகவும் இச்செயலுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்த பொழுது அதனை வாங்க மறுத்துள்ளதாகவும் எனவே சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலினை சரி செய்யவும் மாநகராட்சி மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தினை உடனடியாக செலுத்தும் படியும் தவறும் பட்சத்தில் மாலுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் வணிக வளாகத்தில் செயல்படும் கடைகள் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe