விவசாயியிடம் 10 லட்சம் மோசடி- பணத்தை திருப்பி கேட்டதற்கு கோழிகளைத் திருடிச் சென்ற நபர்கள்...

published 1 year ago

விவசாயியிடம் 10 லட்சம் மோசடி- பணத்தை திருப்பி கேட்டதற்கு கோழிகளைத் திருடிச் சென்ற நபர்கள்...

கோவை: கோவையில் விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதால், கோழிகளை திருடி சென்றனர். போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

கோவை இருகூர் இந்திராநகரை சேர்ந்தவர் காளியப்பன் (80). இவர் இருகூர் ஜேஜே நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டணம் வசூலிக்கும் நீச்சல் குளம் வைத்துள்ளார். இங்கு கோவை நீலிகோனாம்பாளையத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் செந்தில்குமார் (45), அவரது மகன் பரத்குமார் (21) ஆகியோர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது காளியப்பனுடன் இருவரும் நெருங்கி நட்பாக பழகினர். இந்நிலையில், அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் காளியப்பன் அவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். விரைவில் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தந்தை, மகன் தெரிவித்துள்ளனர். 

ஆனால், பல மாதங்கள் ஆகியும் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல், பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்தனர். இதையடுத்து காளியப்பன் அவர்களை தனது நீச்சல் குளத்துக்கு வரவேண்டாம் எனவும், பணத்தை சீக்கிரம் கொடுத்து விடும் படியும் தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று செந்தில் குமாரும், பரத்குமாரும் நீச்சல் குளம் இருக்கும் பகுதிக்கு அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 9 கோழிகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றதாக தெரிகிறது. இது குறித்து காளியப்பன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமார் மற்றும் அவரது மகன் பரத்குமாரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe