டெங்குவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்...

published 1 year ago

டெங்குவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்...

கோவை: டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் டெங்கு வராமல் தற்காத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையாளரும் அப்போது பல்வேறு இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நேரடியாக சென்று மேற்கொண்டு வருகிறார். மாநகரில் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி பகுதிகளான காந்திபுரம், ராம் நகர், காட்டூர், விவேகானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் பல்வேறு தெருக்களுக்குச் சென்ற அவர்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள், ட்ரம்  ஆகியவற்றை ஆய்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் எவ்வாறு டெங்குவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தேவையற்ற பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும், தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள் மற்றும் ட்ரம் உள்ளிட்டவற்றை முறையாக மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் புழுக்கள் சேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்விற்கு வரும்பொழுது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பணியாளர்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டு அறிந்து அதற்கான பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe