கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை…

published 1 year ago

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை…

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.


கோவையை சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி அதிபரான இவரது வீடு கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது. இந்நிலையில், கடந்த 12-ந் தேதி முதல் வெள்ளக்கிணறில் உள்ள அவரது வீடு, அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி மற்றும் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையை முன்னிட்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அந்தந்த இடங்களில் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்றும் 4-வது நாளாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு இடங்களில் சோதனை நிறைவு பெற்றது. இன்று 5-வது நாளாக வெள்ளகிணறில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe