கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு…

published 1 year ago

கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு…

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.  இதில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கைகளை கலெக்டரிடம் அளித்தனர். 

இதனையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று பெண்ணை அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எனது குடும்பத்தினருக்கு சொந்தமான 8 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் உள்ளது. அந்த இடத்தை தங்களுக்கு தெரியாமல் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் விற்று விட்டார். எனவே அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும். ஆனால் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை. 

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி மனு அளிக்க அந்த பெண்ணை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர். 
கலெக்டர் அலுவலகம் அருகே குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe