கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு புகைப்படக்கண்காட்சி- மாவட்ட ஆட்சியர் தகவல்…

published 1 year ago

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு புகைப்படக்கண்காட்சி- மாவட்ட ஆட்சியர் தகவல்…

கோவை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை
வஉசி மைதானத்தில் இதழாளர்-கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18.10.2023 முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார்பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  "இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர் கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18.10.2023 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்புகைப்படக்கண்காட்சி 18.10.2023
அன்று முதல் ஒருமாதம் வரை நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவன தலைவத்  கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைக்கவுள்ளார். மேலும், இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்.  மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர்,
உள்ளாட்சி பிரதிநிதிகள்
கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் கலைபண்பாட்டுத் துறை சார்பில் மாலை
4.30 மணிக்கு கிராமிய நையாண்டி மேளம், ஸ்ரீசக்ரா ஜிக்காட்ட கலைக்குழு, ஸ்ரீ கலாலயா அகாடமி - பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும், இந்துஸ்தான் கல்லூரி மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சியினை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe