பேச்சுப்போட்டியில் ஆர்வமுள்ள மாணவரா நீங்கள்- அரசு சார்பில் பேச்சுபோட்டி அறிவிப்பு!

published 1 year ago

பேச்சுப்போட்டியில் ஆர்வமுள்ள மாணவரா நீங்கள்- அரசு சார்பில் பேச்சுபோட்டி அறிவிப்பு!

கோவை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கோவையில் நடைபெற உள்ள பேச்சுபோட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் வருகின்ற 30.10.2023, 31.10.2023, 01.11.2023, 02.11.2023 ஆகிய நாட்களில் காந்திபுரம் சித்தாபுதூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இப்போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விதிமுறைகள் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: காஞ்சித் தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா.

தந்தை பெரியார் பிறந்த நாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: வெண்தாடி வேந்தர், வைக் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்த்திருத்தங்கள்.

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள்.

ஜவஹர்லால் நேரு பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம்.

பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: அண்ணாவும் மேடைப்பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

தந்தை பெரியார் பிறந்த நாளுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகள்: பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம்,  தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள்.

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள்: காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை,  மதுரையில் காந்தி.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டி தலைப்புகள்: சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும், ஒரு பள்ளியில் இருந்து ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர், கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர், பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய், மூன்றாம் பரிசாக 2000 மற்றும் அரசு பள்ளி மாணவர்களில் இரண்டு பேருக்கு சிறப்பு பரிசுத்தொகையாக தலா 2000 என்ற வகையில் பரிசு தொகைகள் வழங்க பெறும், போட்டிகள் நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகைகள் மற்றொரு நாளில் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படும், குலுக்கள் முறையில் தலைப்பு வழங்கப்படும் அதனை மட்டுமே அம்மாணவர் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும், காலை 10 மணிக்கு போட்டி தொடங்கப்படும் பட்சத்தில் 10:30 மணி வரை மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் அதன் பின்னர் வரும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் போட்டியில் கலந்து கொள்ள வரும் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும், ஒரு கல்லூரியில் இருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும், கோவை மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ மாணவியர் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர், கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக 5000 ரூபாய், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய் மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் என்ற வகையில் பரிசு தொகைகள் வழங்கபடும், குலுக்கல் முறையில் தலைப்புகள் வழங்கப்படும் அதனை மட்டுமே பேசுவதற்கு மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும், காலை 10 மணிக்கு போட்டி தொடங்கப்படும் நிலையில் 10:30 மணி வரை மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe