ஆதீனங்கள் சொல்வதை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

published 1 year ago

ஆதீனங்கள் சொல்வதை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

கோவை: கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது என திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஒருவேளை வைத்திருந்தால் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் எடுத்தால் தான் பிரச்சனை வரும் காலம் காலமாக விஜயதசமி ஆயுத பூஜை என்றால் சக்தி பூஜை என அர்த்தம் அரசு அதிகாரிகள் என்றால் இப்படி பேசினால் தான் இந்த அரசுக்கு பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அப்படி ஒரு சுற்றறிக்கை இல்லை என கூறுகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது சரஸ்வதி லட்சுமி சக்தி ஆகிய தெய்வங்களின் படங்கள் இருக்கும் ஆயுதங்களையே சக்தியின் கையில் வைத்து தான் நாம் கொண்டாடுகிறோம் ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் இது போன்ற சுற்றறிக்கை வரவேண்டும் என கூற வேண்டும் குறிப்பாக எப்படி ஒரு தலைபட்சமாக நடந்து கொள்பவர்கள் மீது பதவி நீக்கம் செய்ய வேண்டும் செய்யப்பட வேண்டும் ஒரு தலைப்பட்சமாக எப்போதும் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருப்பது என்பது சரியில்லை என்பது எனது கருத்து நீட் தேர்ச்சியின் மூலம் பயிற்சியின் தேர்வின் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். திமுக அரசு இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மறந்து இது போன்று ஒருதலை பட்சமாகவே நடந்து கொள்வது சரியில்லை நீட் விளக்கு குறித்த முதல் கையெழுத்து எனக் கூறியது என்ன ஆனது என தெரியவில்லை

லியோ திரைப்பட விவகாரம் பெரிதாகி வருகிறது என்னை பொருத்தவரை அனைவருக்கும் ஆன பொதுவான நடைமுறைகள் இருக்க வேண்டும் குறிப்பிட்ட நபர்களுக்கான நடைமுறைகளாக இருக்கக் கூடாது. எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும் ஒரே மாதிரியான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும் அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது. ஆக தமிழக அரசின் அடுத்த தாள் 7 மணி காட்சி போட விட முடியாது இந்த அழுத்தம் பிரட் ஜெயிட்டேனும் தூய தமிழில் நடந்து கொள்ளும் நிறுவனத்தால் தான் பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர் அப்படி நான் சினிமாவை சினிமா என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை நான் கூறுகிறேன்.

ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை யாருக்கு உள்ளுணர்வாக வெற்றியை கொண்டாட தோணுகிறது அதை சொல்லிக் கொண்டாடட்டும் இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர் வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும் போது தப்பில்லை. மற்ற மதத்தவர்கள் சொல்லும் போது அவர்களது நம்பிக்கைகளையும் குறைய என சொல்ல முடியாது எனவே அதை தப்பு என கூற முடியாது.

ஆதீனங்கள் காலம் காலமாக தமிழோடு ஆன்மீகத்தை வளர்த்தவர்கள் அவர்கள் ஒன்று சொன்னால் அரசாங்கம் அதை நிச்சயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்ற மதங்களை மற்ற பிரச்சனைகளையோ சொல்லும் போது அரசாங்கம் உடனடியாக கவனத்தை செலுத்துகிறது. ஆனால் இந்து மதம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் கவனம் கொடுப்பதில்லை. திருப்பூர் முதல்வரின் மருத்துவமனை முதல்வரின் கருத்து சுற்றறிக்கையை கூட அரசு கவனமாக கவனிக்க வேண்டும் ஆதீனங்கள் சொல்கிறார்கள் என்றால் அதில் உண்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் எனது வேண்டுகோள்.

சென்னி மலையில் மக்கள் எந்த அளவிற்கு திரண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் மேல்மருவத்தூரிலும் இதே போல் ஒரு பிரச்சனை வந்தது அவரவர்கள் நம்பிக்கையை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதிலும் மற்றவர்களின் நம்பிக்கையில் அவர்கள் உள் புகுவதும் தவறு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா கூட்டணியின் மகளிர் மாநாடு குறித்து பேசியவர் சோனியா காந்தி அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மரியாதைக்குரிய கலைஞர் அண்ணாதுரை அவர்களின் நேரத்தில்தான் பெண்களுக்கான சம உரிமை கொடுக்கப்பட்டது என கருத்தை கூறியுள்ளார். அதற்கு முன்னால் இருந்த காமராஜரை முற்றிலுமாக மருந்துள்ளார் காமராஜர் படிப்பறிவை கொடுத்ததால் தான் பெண்களுக்கு நிச்சயமான ஒரு புரிதலும் ஒரு பக்க பலமும் மேன்மையும் வந்தது. அதனால் அதை மறந்தது தவறு மேலும் சாமானிய பெண்களுக்கான மாநாடு என சொல்லிவிட்டு அதில் இருந்தவர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளாகவே இருந்தனர். சாதாரண பெண்கள் தலைவர்கள் என யாரும் இல்லை மிக தவறான அவன் நம்பிக்கையை மகளிர் மத்தியில் உதயக்கிறார்கள் மகளிர் இட ஒதுக்கீடு இப்போது வராது என கூறுவது தவறு அனைத்து கட்சியைச் சார்ந்த மகளிர் 33 சதவீத மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி கூற வேண்டும் ஏனென்றால் காரணம் யாரும் இது கொண்டு வரவில்லை சில நிர்வாகம் ரீதியாக காரணங்கள் காரணமாக இந்த ஆண்டு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை கனிமொழி போன்றவர்கள் கூட கண்துடைப்பு என கூறுவது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

நான் மட்டுமல்ல பாரதப் பிரதமரும் காமராஜரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் கருப்பு பண ஒழிப்பிற்கு என்னை பாராட்டிருப்பார் என பிரதமர் கூறியுள்ளார். எனவே ஊழலற்ற தன்மை முன்னேற்றத்திற்கு உதாரணமாக காமராஜரை எடுத்துக் கொள்வோம்.

பெட்டி பெட்டியாக பணம் எடுத்த பின்பு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுகின்றனர். இது அனைத்தும் மக்களின் பணம் இதை பழிவாங்குகிறது என சொன்னால் மக்கள் நம்ப மாட்டர்கள்.

மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் தான் நான் பார்க்கிறேன் மிகவும் பணம் நான் பார்க்க மாட்டேன்.
காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பின்பு ஸ்டாலின் இடம் காணாமல் போய்விட்டது என்பதுதான் என்னுடைய கருத்து.

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனை செய்துள்ளது உக்கரின் போராக இருக்கட்டும் இன்றைக்கு இஸ்ரேல் போராக இருக்கட்டும் கொரோனா காலகட்டத்திலும் நமது இந்திய அரசு பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டில் மிக பத்திரமாக இந்தியர்கள் மீட்கப்பட்டனர். பெரும் போர் சூழலில் இருந்து இந்தியர்களும் தமிழர்களும் வந்துள்ளார்கள் என்பது பிரதமருக்கு அயல் நாடுகளில் எவ்வளவு மரியாதை இருக்கிறது. என்பதும் அதன் காரணமாகத்தான் இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் உலகில் எந்த பகுதியில் பிரச்சனைக்கு பிரச்சினையில் இருந்தாலும் அவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு வரும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண குடிமகள். எனவே அனைத்து விஷயங்களிலும் கருத்து கூறுவது உரிமை எனக்கு உண்டு என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe