வால்பாறை சுற்றுலா சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாப பலி..!

published 1 year ago

வால்பாறை சுற்றுலா சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாப பலி..!

கோவை: வால்பாறை சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு மலை தொடர்ச்சியின் ஒரு பகுதியான வால்பாறை என்பது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

இந்த சுற்றுலா தளத்தை குட்டி நீலகிரி என்று அழைப்பார்கள். இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் வால்பாறை அடுத்துள்ள சொலையார் ஆர்ச் அருகே ஆற்றில் குளித்துள்ளனர்.

அப்போது ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இது குறித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 3 பேர் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

2 மாணவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe