என்னுடைய நேர்மையை குறித்து பேசுவதற்கு பாஜகவிற்கு அருகதை இல்லை- திமுக எம்பி ஆ.ராசா ஆவேசம்…

published 1 year ago

என்னுடைய நேர்மையை குறித்து பேசுவதற்கு பாஜகவிற்கு அருகதை இல்லை- திமுக எம்பி ஆ.ராசா ஆவேசம்…

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் சார்பில் "மலையகம் 200" என்ற தலைப்பில் பன்னாட்டு மாநாடு என்று காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் கலாநிதி வீராசாமி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு இலங்கைத் தமிழர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, மலையகத்தமிழர்கள் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக தெரிவித்தார். 1983க்கு பிறகு ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களில் மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள் என தெரிவித்த அவர் மலையகத் தமிழர்களுக்கு இன்னும் என்னென்ன உரிமைகள் வழங்கப்படவில்லை அதற்கு முன்பு இங்கு வந்து நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு நிலப்பட்டா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்று ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் குழுவினை அமைத்து அந்த குழு இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த அறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் முகாமில் இருக்கக்கூடிய மலையகத் தமிழர் மக்கள் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்படாமல் உள்ளது என்பதை அட்டவணைப்படுத்தி உள்ளதாகவும் கூறினார். அதேபோல் இலங்கையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசின் சார்பில் ஒரு அறிக்கையை தயார் செய்து அந்த இரண்டு அறிக்கையையும் ஒப்பீடு செய்கின்றபோது ஏறத்தாழ ஒரே மாதிரியான எண்ணிக்கையில் ஆய்வறிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அதன்படி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த மக்களை தொடர்பு கொண்டு அவர்களது பிரச்சனைகளை முதலமைச்சர் உடன் இணைந்து பேசி உரிய தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என தெரிவித்தார். மேலும் இந்த குழுவை அமைத்த முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுக தான் ஆதரவாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி பாஜகவில் இருந்து விலகிய பின்பு தற்பொழுது தெரிவித்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பாஜகவில் இருந்து விலகிய பின் திடீரென ஞானஉதயம் வந்திருக்கிறது எனவும் அது எத்தனை நாட்கள் இருக்கிறது என்று பார்ப்போம் என தெரிவித்தார். மேலும் என்னுடைய நேர்மையையும் யோகிதையையும் பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கோ அண்ணாமலைகோ முருகனுக்கோ அருகதை இல்லை என தெரிவித்துச் சென்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe