மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள்- மாநகரில் குப்பைகள் தேக்கம்…

published 1 year ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள்- மாநகரில் குப்பைகள் தேக்கம்…

கோவை: அரசு ஒதுக்கீடு செய்த கூலி 721 ரூபாய் வழங்க கோரி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வஉசி மைதானத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் ஆறாம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இதில் பங்கேற்று கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் எங்கே எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் ஆயுத பூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகை தினங்களில் மாநகரில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe