புஸ்ஸி ஆனந்த் நலம் பெற வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோணியம்மன் கோவிலில் மண்டியிட்டு வழிபாடு….

published 1 year ago

புஸ்ஸி ஆனந்த் நலம் பெற வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோணியம்மன் கோவிலில் மண்டியிட்டு வழிபாடு….

கோவை: புஸ்ஸி ஆனந்த் நலம் பெற வேண்டி கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கோணியம்மன் கோவிலில் மண்டியிட்டு வழிபாடு நடத்தினர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  பூரண நலன் பெற வேண்டி கோவை தெற்கு மாவட்ட தளபதி மக்கள் இயக்கத்தினர் ஆலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்திடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். 

இந்நிலையில்,கோவை தெற்கு மாவட்ட   உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி, இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர்  தலைமையில்,முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் திரண்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் உடல் நலம் பூரண நலன் பெற வேண்டி கால்களை மண்டியிட்டு சிறப்பு பிரார்த்ரனை செய்தனர்.இதே போல ஆலயங்களிலும்,சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..புஸ்ஸி ஆனந்த் தற்போது  நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe