தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன்- புத்தொழில் சூழமைவு தொடர்பான அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு...

published 1 year ago

தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன்- புத்தொழில் சூழமைவு தொடர்பான அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு...

கோவை: தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் சார்பில் புத்தொழில் சூழமைவு தொடர்பான அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் சார்பில் புத்தொழில் சூழமைவு தொடர்பான அரசு அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் புத்தொழில்களுக்கு உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கான தொடக்க மற்றும் சூழலை கட்டமைப்பதற்கும், புத்தாக்கத்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் புத்தொழில் முனைவோர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூ.10இலட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்படுகிறது. பெண் தொழில்முனைவோர்களுக்கு ரூ.15இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மாநிலத்தை கண்டுபிடிப்பு மையமாக மாற்ற ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர். கண்டுபிடிப்பாளர்கள்.
இன்குபேட்டர்கள், முதலீட்டாளர்கள், தொழில் அமைப்புகள் வழிகாட்டிகள் அரசு
நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அரசின்
வளர்ச்சியை மேம்படுத்தமுடியும். தனித்தனியாக ஒவ்வொரு அரசுத் துறைகளும் செயல்பட்டாலும், அவை அனைத்தும் ஒருங்கிணைத்து திட்டங்களை
செயல்படுத்தும் போது அதன் செயல்பாடு சிறப்பாக அமையும். ஒவ்வொரு அரசு
துறைகளும் மற்ற துறைகளில் இருக்கும் செயல்பாடுக்களையும் வாய்ப்புகளையும்
அறிந்து இணைத்து செயலாற்றும் போது பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கோவை மாவட்டம் இந்தியளவில் சிறந்த புத்தொழில் மையம்
என்னும் சிறப்பு வாய்ந்தது. எண்ணிலடங்கா வாய்ப்புகள் வழங்கிடும் நகரமாக திகழ்கிறது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி புத்தொழில் உருவாகும் சூழலை
அரசு அதிகாரிகள் வழங்கிட வேண்டும் என்றார்.

இப்பயிற்சிக் கூட்டத்தில் புத்தொழில் குறித்த விழிப்புணர்வினையும்
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும்
அரசு அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. அரசு துறைகளில் நிலவிவரும் சவாலான பிரச்சனைகளுக்கு புத்தாக்க சிந்தனைகளுடன் செயல்படும் புத்தொழில்
நிறுவனங்கள் மூலம் தீர்வு காணும் வாய்ப்பினை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதில் கூட்டுறவு, சமூக நலம், நெடுஞ்சாலை,
வேளாண்மை, தோட்டக்கலை, மின்சாரம், மருத்துவம், மீன் வளம், தாட்கோ உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள்
இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe