தீபாவளி ஸ்பெஷல் : டவுன்ஹாலில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டம் - புகைப்படத்தொகுப்பு

published 1 year ago

தீபாவளி ஸ்பெஷல் : டவுன்ஹாலில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டம் - புகைப்படத்தொகுப்பு

கோவை தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை வாங்க கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புத்தாடைகள் பட்டாசுகள் மற்றும் பலகாரங்களை வாங்கி வருகின்றனர்.

கோவையைப் பொறுத்த வரையில் டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துணி வகைகள், நகைக் கடைகள், பர்னிச்சர் வகைகள், பலகார கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வார காலமாகவே இந்த இரண்டு இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

 

கடந்த இரு தினங்களாக டவுன்ஹாலில் திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள் இருக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பணக்கார வீதி பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. 

இதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடம் உக்கடம் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe