கோவையில் தீபாவளியால் காற்று மாசுபட்டதா? எந்த அளவுக்கு பாதிப்பு - முழு விவரம்

published 1 year ago

கோவையில் தீபாவளியால் காற்று மாசுபட்டதா? எந்த அளவுக்கு பாதிப்பு - முழு விவரம்

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் கோவையில் எந்த அளவுக்கு காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மற்றும் போகி பண்டிகையின் போதும் பட்டாசுகள் வெடிப்பது மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது உள்ளிட்டவை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்துள்ளது.

பண்டிகைக்கு முந்தைய நாள் தொடங்கி, மறுநாள் வரை பலரும் தங்களது வீடுகளிலும், பொது இடங்களிலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனிடையே தீபாவளி பண்டிகையை தொடர்ந்து கோவையில் எந்த அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது என்ற விவரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய இரு பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் இரண்டு இடங்களிலும் பெரிய அளவில் காற்று மாசுபடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டு அளவு ஏர் க்வாலிட்டி இண்டக்ஸ் (ஏ.கியூ.ஐ)என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது காற்றில்  மாசின் அளவு பூஜ்ஜியம் முதல் 100 வரை இருந்ததால் பாதிப்பு இல்லை என்றும், 51 முதல் 100 வரை இருந்ததால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200 வர இருந்ததால் மிதமான அளவு என்றும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், 201 முதல் 300 வரை ஏ.கியூ.ஐ இருந்ததால் மோசமான நிலை என்றும், 301 முதல் 400 வரை இருந்ததால் மிக மோசமான நிலை என்றும், 401க்கு மேல் இருந்ததால் கடும் பாடிஹிப்பு என்றும் அளவீடு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவையில் இரு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுவட்டாரத்தில் 197 என்றும், கவுண்டம்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்று மாசின் அளவு 187 என்றும் தெரியவந்துள்ளது.

இதன் மூலமாக தீபாவளி பண்டிகையில் கோவையில் பெரிய அளவில் காற்று மாசுபாடு ஏற்படவில்லை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe