ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் சார்பில் 250 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தம்

published 1 year ago

ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் சார்பில் 250 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தம்

கோவை: ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விபத்து மற்றும் நோய்களால் கால்களை இழந்த 250 பேருக்கு கோவையில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டது.

நவம்பர் மாதம் ரவுண்ட் டேபிள் அமைப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டதால் ஆண்டுதோறும்  நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தை ரவுண்ட் டேபிள் வாரம் கொண்டாடி வருகின்றனர் அதன் உறுப்பினர்கள். இந்த வாரத்தில் ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும்  அதன் கிளையான லேடீஸ் சர்க்கிள் சார்பில் 
சமூக  நலன் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் ரவுண்ட் டேபிள் இந்தியா 31 மற்றும் லேடீஸ் சர்க்கிள் சார்பில் விபத்து மற்றும் நோய்களால் கால்களை இழந்த 250 பேருக்கு இலவசமாக செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் செயற்கைக்கால்கள் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் இந்தியா 31-ன் கோவை மாவட்ட தலைவர் பரத் சுப்ரமணியம் லேடீஸ் சர்க்கிள் 16 தலைவர் பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்கினர்.

இதுகுறித்து ரவுண்ட் டேபிள் இந்தியா 133-ன் தலைவர் கார்த்திக்குமார், லேடீஸ் சர்க்கிள் ஏரியா 7 தலைவர் ராணி மோகன் ஆகியோர் கூறியதாவது:

கோவையில் 8 ரவுண்ட் டேபிள், 6 லேடீஸ் சர்கிள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பல்வேறு நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆர்.எஸ்.புரத்தில் 1987ம் ஆண்டு செயற்கை கால் மையம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 300 செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு செயற்கை கால் தயாரிக்க ரூ.4 ஆயிரம் செலவாகிறது. இதனை ரவுண்ட் டேபிள் அமைப்புகளின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் இருந்து வந்திருக்கும் 250 பேருக்கு இலவசமாக செயற்கை கால்கள் பொருத்தப்படுகிறது. இது தவிர இந்த வாரத்தில் 700க்கும் அதிகமான ரத்த தானம் செய்ய முடிவு செய்து அதனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe