பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுப்பது, சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் மாநில இணைப் பொதுச்செயலாளர் லீமா ரோஸ் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், மேலும் இளைஞர்களை சீரழிக்கும்  ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த லீமா  ரோஸ், கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை சீட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe