கோவையில் அடுத்த மழை எப்போது தெரியுமா?

published 1 year ago

கோவையில் அடுத்த மழை எப்போது தெரியுமா?

கோவை: 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தது மழைக்கு எப்பொழுது வாய்ப்பு இருக்கிறது என்று கோயம்புத்தூர் வெதர்மேன் என்று அழைக்கப்படக்கூடிய சந்தோஷ் கிருஷ்ணன் விவரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

நவம்பர் 20ஆம் தேதி முதல் கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மழையின் தாக்கம் அதிகரிக்க கூடும்.

குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி முதலே மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும்.

இலங்கை அருகே நீடிக்கும் காற்று சுழற்சி சற்று மேகே நகர்ந்து கல்ப் ஆப் மன்னார் வழியாக அரபிக் கடலுக்கு நகரக்கூடும். இந்த நிகழ்வு ஈரப்பதமான காற்றை வங்க கடலில் இருந்து அரபிக் கடலுக்கு தமிழகத்தின் ஊடாக  இழுப்பதால் தமிழகத்தின் மழையின் தாக்கம் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு:

இதனால் விவசாயிகள் மழை நேரங்களில் பண்ண முடியாத வேலைகளை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஏனென்றால் இந்த நிகழ்வு முடிந்த பிறகு இடைவிடாமல் அடுத்து அடுத்து இரண்டு வாரங்களுக்கு நிகழ்வுகள் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

பொதுமக்களும் அடுத்த சுற்று மழை தொடங்க இருப்பதால் தங்களது பணிகளை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe