கொடநாடு கொலை வழக்கு : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் நேரில் ஆஜராக உத்தரவு

published 1 year ago

கொடநாடு கொலை வழக்கு : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் நேரில் ஆஜராக உத்தரவு

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார்.

தொடர்ந்து கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவலின் படி பலருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த அக். 8ம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தனர். கடந்த அக்.13ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கனகராஜின் செல்போனில் எந்தெந்த எண்களுக்குப் பேசியிருந்தார்? என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாகவும்,  சிபிசிஐடி போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கனகராஜ் சேலம் அடுத்த ஆத்தூரில் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சென்னையை சேர்ந்த சிவக்குமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், வருகிற 28ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிவக்குமாரை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe