பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...

கோவை: கோவை தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், எட்டு மணி நேர வேலை என்பதை வரைமுறைப்படுத்த வேண்டும், 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி இரட்டிப்பு பணி முறையை ரத்து செய்திட வழிவகை செய்திட வேண்டும், விபத்து காரணமாக ஏற்படும் நீதிமன்ற வழக்கு செலவை கழக நிர்வாகிகளே ஏற்க வேண்டும், போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும், பொய் புகார்களை காரணம் காட்டி தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மண்டல தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இச்சங்கத்தின் தென்பாரத அமைப்பு செயலாளர் துரைராஜ் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் பேரவை பொதுச் செயலாளர் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe