கருமத்தம்பட்டியில் தொழிற்சாலையில் பணம் திருடிய தொழிலாளி கைது

published 2 years ago

கருமத்தம்பட்டியில் தொழிற்சாலையில் பணம் திருடிய தொழிலாளி கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கருமத்தம்பட்டி, ஜூன்.24- கருமத்தம்பட்டி பகுதியில் மூர்த்தி (வயது 51) என்பவருக்குச் சொந்தமான தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி  செந்தில் பிரபு அலுவலக அறையில் ரூ. 52 ஆயிரம் வைத்து வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது  அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.52 ஆயிரம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர்  தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அப்போது அங்கு வேலை செய்து வந்த வேலூரைச் சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் பிரபு கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய தொழிலாளியைத் தேடி வந்தனர்.

அப்போது சுரேஷ் கடலூர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேசை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.  பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe