மாங்காய் பச்சடி: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

published now

மாங்காய் பச்சடி: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

தமிழ் புத்தாண்டின் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது அறுசுவைகள் கூடிய உணவு. அறுசுவைகளில் நான்கினை சேர்த்து செய்யப்படும் ஒரு உணவின் செய்முறையை நாம் இந்த தொகுப்பில் காண்போம்.

தேவையான பொருட்கள் :


சற்று பழுத்த மாங்காய்-1 (சிறியது)
வெள்ளம்: 1 கப்
மிளகாய் வற்றல்: 1
தாளிக்க கடுகு, உடைத்த உளுந்து
வேப்பம் பூ: 1/4 தேக்கரண்டி

செய்முறை :

Mango: புற்றுநோயை தடுக்கும் மாங்காய் பச்சடி! அழகுக்கும் அழகு சேர்க்குமாம் -  மனிதன்
மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். வெள்ளத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு வடை சட்டியில்அல்லதுஅடிகனமானபாத்திரத்தில் ஊற்றி பாகு வைக்கவும். இந்த பாகு தண்ணீரில் கரையாத பதத்தை எட்டியதும் (ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு துளி பாகை ஊற்றினால் அது கரையாமல் அடியில் தங்கவேண்டும்) 

வேக வைத்த மாங்காய்துண்டுகளைசேர்த்து நான்கு கிண்டி இறக்கவும். கடைசியாக சிறு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, மிளகாய் வற்றல் மற்றும் வேப்பம்பூவை தாளித்து மாங்காய் பச்சடியில் சேர்க்கவும்.
தமிழ் புத்தாண்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான மாங்காய் பச்சடியை செய்து சுவைத்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.

தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe