கோவை, திருவண்ணாமலையில் ரூ 18,000 முதல் ரூ 37,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!

published 1 year ago

கோவை, திருவண்ணாமலையில் ரூ 18,000 முதல் ரூ 37,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு!

கோவை: கோவை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்களையில் மாதம் ரூ.18,000 முதல் ரூ.37,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோவையில் உள்ள  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் திருச்சி, மதுரை, தேனி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கீழுள்ள பணிகளுக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணியமர்த்தப்பட உள்ள காலியிடங்கள், சம்பளம் மற்றும் அதன் தகுதிகள்:

1.சீனியர் ரீசர்ஜ் பெல்லோ : ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை

சீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு எம்டெக் பிரிவில் சாயில் அன்ட் வாட்டர் கன்சர்வேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2.ஜுனியர் ரீசர்ஜ் பெல்லோ : மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்

ஜுனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு பிஎஸ்சியில் அக்ரிகல்சர், ஹார்ட்டிகல்சர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3.டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம்

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ அக்ரிகல்சர் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

இதில் தேர்வானவர்கள் கோவை அல்லது திருவண்ணாமலையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரியக் கல்வி சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கான நேர்காணல் The Dean AC & RI, Vazhavachanur, Tiruvannamalai என்ற முகவரியில் டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது. சீனியர் மற்றும் ஜுனிர் ரிசர்ச் பெல்லோ பணிக்கான நேர்க்காணல் என்பது The Dean AAEC & RI, Coimbatore என்ற முகவரியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் விவரத்திற்கு  இந்த இணைப்பை https://tnau.ac.in/site/csw/job-opportunities/ கிளிக் செய்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தளவிற்குச் சென்று பார்க்கவும்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe