கோவையில் 107 இடங்களில் ஆழ்துளை கிணறு : பணிகள் தீவிரம்

published 2 years ago

கோவையில் 107 இடங்களில் ஆழ்துளை கிணறு : பணிகள் தீவிரம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை:  கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தவிர்த்து மாநகராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி உள்ளது. மேலும், சில ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாததால் பயன்பாடு இன்றி விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு உப்பு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

 மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.5 கோடிக்கு 107 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான, ஒப்புதல் மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 200 ஆழ்துளை கிணறுகள் மறுபுனரமைப்பு செய்யப்படும். 

இந்த பணிகள் நிறைவடைந்தால் மாநகராட்சி பகுதியில் உப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது முத்தண்ணன் குளக்கரை அருகே ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் 107 இடங்களிலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்,’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe