சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் போராட்டம்...

published 1 year ago

சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் வேண்டி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் போராட்டம்...

கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ, மாணவியர் பெற்றோருடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பள்ளியின் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்தவுடன்  மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் சரவணம்பட்டி பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பள்ளி வளாகத்தில் கழிவறையை சுத்தம் செய்து  பயன்படுத்தும் வகையில் வைக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தில்  குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை  எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து  மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் , உரிய அதிகாரிகளின் கவனத்திக்கு  கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்  காரணமாக அப்பகுதியில்  சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe