கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மண்டலங்களில் புதிதாகின்றன அரசு பேருந்துகள்

published 1 year ago

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மண்டலங்களில் புதிதாகின்றன அரசு பேருந்துகள்

கோவை: கோவை கோட்டத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் உள்ள அரசு பேருந்துகளில் 229 பேருந்துகள் புனரமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோயமுத்தூர், உதகை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மண்டலங்களுக்கு நடப்பு ஆண்டில் 226 பேருந்துகள் புனரமைக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி புனரமைக்கப்படுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் முதற்கட்டமாக பணி முடித்த 4 பேருந்துகள் 08.12.2023 அன்றும் 11:122023 அன்று மேலும் 5 பேருந்துகளும் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

மீதமுள்ள பேருந்துகளின் கூண்டு கட்டுமான பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவற்றில் மேலும் 36 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பணி முடிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe