சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இந்த எருக்கன் செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!

published 1 year ago

சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் இந்த எருக்கன் செடியில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!

கோவை: சாலையோரங்களில் இருக்கும் இந்த எருக்கன் ஒரு செடியில் இத்தனை மருத்துவக் குணங்கள் உண்டா…!  இந்த செடியில் இலை, பூ மற்றும் அதன் பாகங்களது மருத்துவ பலன்களைப் பார்ப்போம் வாருங்கள்.

இந்த எருக்கன் செடியில் 2 வகை உள்ளது. இந்த இரண்டையில் வெள்ளை எருக்கன் பூக்கள் விநாயகருக்குப் பிடித்த மாலையாகச் சாற்றுவார்கள். இந்த வெள்ளை எருக்கன் பூக்களைக் கொண்ட செடியில் தான் மருத்துவ பலன்களுக்கு உபயோகப் படுத்துவது வழக்கம்

எருக்கன் பால்: இந்த செடியின் தண்டு, இலை என எதனை உடைத்தாலும் அதிலிருந்து வரும் பாலை கால்களில் முட்கள் குத்திய இடத்தில் தடவினால் அந்த வலி குறைந்துவிடும் அதுமட்டுமின்றி முள் குத்திய இடம் பழுத்துப்போய் அந்த முட்கள் தானாகவே வெளியே வந்துவிடும்.

எருக்கன் இலைகள்: இந்த எருக்கன் இலைகள் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்கும் சக்தி கொண்டது. இந்த எருக்கன் இலைகளை நெருப்பில் போட்டு புகைப்பிடித்தால் நமக்கு மார்புச்சளி மற்றும் ஆஸ்துமா கட்டுப்படும்.

மேலும்  உடலில் ஏதேனும் கட்டிகள் இருந்தால், இந்த செடியின் இலைகளை நெருப்பில் வாட்டி கட்டிகள் உள்ள இடங்களில் கட்டினால் அந்த கட்டி பழுத்துப் போய்  உடைந்துவிடும் மேலும் அந்த வீக்கமும் குறைந்துவிடும்.

குதிங்கால் வலிக்கு, ஒரு செங்கல்லை நெருப்பினால் நன்றாகச் சூடு செய்து, அதன்மேல்  எருக்கன் பழுத்த இலையைப் போட வேண்டும், பின்பு சூடு பொறுக்கும் அளவுக்குக் குதிங்காலை அந்த கல்லில் மெதுவாக வைத்து எடுத்தால், வலி குறைந்துவிடும். இதனைத் தொடர்ந்து செய்ய எப்பேர்ப்பட்ட வலியும் காணாமல் போகும். 

எருக்கன் இலைச்சாறு: இந்த இலையின் சாற்றினை பிழிந்து எடுத்து, சில துளிகளை மட்டும் தேனுடன் குழைத்து குழந்தைகளுக்குத் தந்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் மலம் வழியே வெளியே வந்துவிடும்.

இந்த எருக்கன் இலையின் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் நன்றாகக் கலந்து எடுத்து,  அந்த கலவையைக் கடுகு எண்ணெய்யில் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தொழு நோய்களான சொறி, சிரங்கு, படை போன்றவற்றிற்குத் தடவினால் விரைவில் குணமாகும்.

எருக்கன் இலை சாற்றில், பெருங்காயம், லவங்கம், பூண்டு, வசம்பு ஆகியவை 5 கிராம் அளவு சேர்த்துக் காய்ச்சி, போட்டுக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றினை காதில் வலி வந்தால் அல்லது சீழ் வடிந்தால் இந்த மருந்தின் சிறு துளிகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி பறந்தோடும்.

எருக்கம் பட்டை: இந்த செடியின் பட்டைகளை உலர்த்தி, யானைக்கால் வியாதிக்குத் தருவார்கள்..

எருக்கம்பூ: பாம்பு கடித்துவிட்டால், இந்த வெள்ளை எருக்கம்பூக்களை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று விழுங்க வேண்டுமாம் இவாரு செய்வதினால் மருத்துவமனைக்குச் செல்வதற்குள்  விஷம் ஏறாமல் உடல் முழுவதுமாக கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எருக்கம்பூக்களுடன் சிறிதளவு கல் உப்பைச் சேர்த்து நன்றாக அரைத்து அதனை வெயிலில் காயவைத்தால் சாம்பல் போல் ஆகிவிடும். இந்த சாம்பலில் பல் தேய்த்து வந்தால், பற்களில் ஏற்படும் வலி மற்றும் பற்கூச்சம் நீங்கும்.

.இந்த செடியில் அனைத்து பாகங்களும் நிறைந்து உள்ளது, இதில் சிலவற்றை நம்மில் பலர் வீடுகளில் சாதாரணமாக செய்யும் மருத்துவ முறைகள். ஆனால் சிலவற்றை நான் மேலும் நங்கு ஆராய்ச்சி செய்து சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு  மருந்தாகப் பயன்படுத்துவது, பாதுகாப்பானது

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe