ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை எதிரொலி- நகைக்கடை உரிமையாளர்களுடன் போலீஸ் ஆலோசனை…

published 1 year ago

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை எதிரொலி- நகைக்கடை உரிமையாளர்களுடன் போலீஸ் ஆலோசனை…

கோவை: கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில், கடந்த 27ம் தேதி, 575 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம் ஆகியவை திருட்டு போனது. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்த படாததால் கொள்ளை போனது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து போலீசார் மாநகரில் உள்ள நகைக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து விரையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி ரோடு உட்பட முக்கிய இடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மற்றும் வெள்ளி கடைகள் உள்ளன. அதில் சில நகைக்கடைகளின் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தவிர, சி.சி.டி.வி., கேமராக்கள், எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் கருவி ஆகியவையும் பொருத்தி உள்ளனர். மற்ற சில கடைகளில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பில் நகைகளை விற்பனைக்கு வைத்திருக்கும் நகைக் கடைகள், அதற்குரிய உரிய பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்பாடு செய்வதில் அலட்சியம் காட்டக்கூடாது. இருப்பு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நகைகளின் விவரங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி, பாதுகாவலாளிகள் நியமித்திருக்க வேண்டும். எச்சரிக்கை அலாரங்கள் பொருத்தியிருக்க வேண்டும். இது சமந்தமாக மாநகரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுடன், போலீசார் சார்பில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து போலீசார் சார்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe