கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

published 1 year ago

கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

கோவை: கோவையில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையிலிருந்து டிசம்பர் 19- ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் கோவை - வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06105) டிசம்பர் 21-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.


வாரணாசியிலிருந்து டிசம்பர் 24-ஆம் தேதி இரவு 11.20 மணிக்குப் புறப்படும் வாரணாசி - கோவை சிறப்பு ரயில் (எண்: 06106) டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவையைச் சென்றடையும்.

இதேபோல, டிசம்பர் 25 -ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 06111), டிசம்பர் 27 அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியைச் சென்றடையும். டிசம்பர் 30-ஆம் தேதி, இரவு 11.20 மணிக்குப் புறப்படும்

வாரணாசி - கோவை சிறப்பு ரயில் (எண்: 06112) ஜனவரி 2-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவைக்கு வந்து சேரும்

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe