கோவை மக்களே மின்கட்டணம் கட்டுங்கள் என்று மோசடி அழைப்பு வரலாம்.. உஷாரா இருங்க..!

published 1 year ago

கோவை மக்களே மின்கட்டணம் கட்டுங்கள் என்று மோசடி அழைப்பு வரலாம்.. உஷாரா இருங்க..!

கோவை: கோவை வைசியாள் தெருவை சேர்ந்தவர் கோபால்(74). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது செல்போன் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் உங்கள் வீட்டு மின் இணைப்புக்கு கட்டணம் கட்டவில்லை. விரைவில் கட்டவில்லை என்றால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து கோபால் உடனே மின் கட்டணத்தை கட்டி விடுவதாக தெரிவித்தார். உடனே எதிர்முனையில் பேசியவர், உங்களது வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள், உங்களது செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும், அதன் மூலம் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவித்துள்ளார். அதன்படி கோபால் தனது வங்கி கணக்கு விவரங்களை கூறினார்.

சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வந்தது. அந்த நம்பரை கோபால் அந்த நபரிடம் பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு கட்டங்களாக ரூ. 8.10 லட்சம் எடுத்து மோசடி செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோபால் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe