பொங்கலுக்கு பேருந்து முன்பதிவு துவக்கம்

published 1 year ago

பொங்கலுக்கு பேருந்து முன்பதிவு துவக்கம்

கோவை: பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது.

வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி ஞாயிறன்று, போகி பண்டிகை வருகிறது மறுநாள் பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப் பொங்கல் பண்டிகையும், 17ம் தேதி உழவர் தினமும் கொண்டாடப்பட உள்ளது.

வெளியூர்களில் வேலை செய்யும் தமிழகத்தின் பல்வேறு 
பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த பண்டிகை நாளில் சொந்தஊர் செல்வது வழக்கம். ஆண்டுதோறும் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர்.

இதற்காக பொதுமக்கள், அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

தமிழகத்தில், 300 கி மீ துாரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கோவை, திருப்பூர். சேலம் தஞ்சாவூர், பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, 1,100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

இந்த விரைவு பஸ்களில், 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால்,

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

செய்யலாம்

ஜன., 12ம் தேதிக்கான பயணத்திற்கு இன்றும், 13ம் தேதி பயணத்திற்கு நாளையும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe