கோவை, ஈரோடு, சேலம், பாலக்காடு வழியாக சென்னைக்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள்...!

published 1 year ago

கோவை, ஈரோடு, சேலம், பாலக்காடு வழியாக சென்னைக்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்கள்...!

கோவை: கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த இரண்டு ரயில்களில் ஒரு ரயிலானது வரும் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர்,  பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக மாலை 7.20 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது.

இதேபோல், மற்றொரு ரயில் கோட்டயத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களிலும் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe