செல்போனையும், மனைவியையும் காணோம் என்று கூறி கோவை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்

published 1 year ago

செல்போனையும், மனைவியையும் காணோம் என்று கூறி கோவை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்

கோவை: கோவை அடுத்த சின்ன தடாகத்தை சேர்ந்தவர் வேலுசாமி (45). கூலி தொழிலாளி. 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் திருடு போனது. இது குறித்து அவர் தடாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையே இன்று வேலுசாமி கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் வளாகத்தில் திடீரென தான் மறைத்து பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

 இதனைப் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தீ குளிக்க விடாமல் தடுத்தனர். போலீசாரிடம் அவர் கூறுகையில், ''எனது மகளின் செல் போனை சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பறித்து சென்று விட்டார். 

இது குறித்து தடாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தற்போது கடந்த 4 நாட்களாக எனது மனைவியும் காணவில்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை முதலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe