கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த காட்டுயானை மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 year ago

கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த காட்டுயானை மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் வட்லக்கி எனும் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா வனப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் யானைகள் சென்றுள்ளது. அந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.  

இதனை அடுத்து உடன் வந்த யானைகள் இதனை காப்பாற்ற தொடர்ந்து பிளிறியபடி அங்கு நின்றுள்ளது.  இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கேரள வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இரவு நேரம் என்பதாலும் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் காலையில் மீட்பு பணியை துவங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தொடங்கியது. ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில்  தோண்டப்பட்டு சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது.

யானைகளின் வலசை செல்லும் காலம் துவங்கியுள்ளதால் யானைகள் இடம் பெயர்ந்து வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.தற்போது அந்த யானை கோவை வனப்பகுதிக்கு இடம் பெயர செய்து தமிழக வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.

யானையை மீட்கும் வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/MKXbxaHSUik?si=qP3W3SAPiVGgF0si

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe