கோவை வியாபாரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த அமமுக பிரமுகர் கைது…

published 1 year ago

கோவை வியாபாரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த அமமுக பிரமுகர் கைது…

கோவை: சிங்கப்பூர் தொழிலதிபரிடம் இழந்த பணத்தை வாங்கி தருவதாக கூறி கோவை அலுமினிய வியாபாரியிடம் ரூ. 13 லட்சம் மோசடி செய்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.  
 

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு தொழில் ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அலுமினிய பொருட்களை ரவி அனுப்பி வைத்துள்ளார்.  மாதங்கள் பல கடந்தும் கண்ணன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து ரவி ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே கண்ணனின் ஊரைச் சேர்ந்த அமமுக பிரமுகராக 
(அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர்) உள்ள
பூலோக பாண்டியன் என்பவர் ரவிக்கு அறிமுகமாகியுள்ளார்.  அப்போது பூலோக பாண்டியன், வியாபாரி ரவியிடம், கண்ணனின் சொத்துகள் அடமானத்தில் உள்ளதாகவும், ரூ. 13 லட்சம் கொடுத்தால் சொத்துக்களை மீட்டு விற்பனை செய்து கொடுத்து உங்களது முழு பணத்தையும் கண்ணனிடம் வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ரவி, பூலோக பாண்டியனிடம் இரண்டு தவணைகளில் 13 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பூலோக பாண்டியன், கண்ணனிடமிருந்து பணத்தை பெற்று தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ரவி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அமமுக பிரமுகர் பூலோக பாண்டியன் தலைமறைவானார். 

கடந்த ஆறு மாதங்களாக போலீசார் அவரை தேடி வந்தனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பூலோக பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் உலோக பாண்டியன் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து செல்வபுரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர் . தூத்துக்குடியில் பதுங்கி இருந்த பூலோக பாண்டியனை செல்வபுரம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe