கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடம்; பொங்கலுக்குள் நிறைவு..! சட்டப்பேரவை குழு தலைவர் பேட்டி...

published 1 year ago

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடம்; பொங்கலுக்குள் நிறைவு..! சட்டப்பேரவை குழு தலைவர் பேட்டி...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.  அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும் வரும் புதிய கட்டிடம், அவசர பிரிவு, ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ங்களில் ஆய்வு செய்து தீர்வுகான வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அந்த அடிப்படையில் முதல் மாவட்டமாக கோவை வந்துள்ளதாகவும் 110 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ல், கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட பல்அடுக்கு கட்டிட பணிகள் வரும் ஜனவரி பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என பொறியாளர்கள் கூறியுள்ளனர் என்றார். மேலும் தமிழக முதல்வர் மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் 4500 வெளிநோயாளிகள், 1,509 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அளவிற்கு பெரிய மருத்துவமனையாக உள்ளது என கூறிய அவர் தற்போதைய புதிய கட்டிடமும் பல்வேறு அதிநவீன கருவிகள், வசதிகளுடனான மருத்துவமனையாக, தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் செயல்படும் என தெரிவித்தார். 

மேலும் இரண்டு மருத்துவமனைகளை இணைக்கும் பாலம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் எனவும்  அது குறித்து பரிசீலனை செய்து கட்டி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம் என கூறினார். தினம் தோறும் இருதய அறுவை சிகிச்சை செய்ய தேவையான வசதிகளை செய்ய இக்குழு பரிந்துறை செய்ய உள்ளாகவும்  தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மதிபீட்டு குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள் மற்றும் அத்துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe