மறைந்த தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் க்கு அஞ்சலி செலுத்திய கோவை மாவட்ட பாஜக வினர்…

published 1 year ago

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜய்காந்த் க்கு அஞ்சலி செலுத்திய கோவை மாவட்ட பாஜக வினர்…

கோவை: கோவை, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர்  கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்  கலந்து கொண்டு உட்பட பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக மாவட்ட தலைவர்,உண்மை வாழ்வில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர். சமூக அவலங்களை திரைப்படத்திலும் நிஜ வாழ்விலும்  தட்டிக் கேட்ட துணிச்சல் மிக்க நபர். பசி என்று தன்னை அணுகி வரும் யாரும் இருந்து விடக் கூடாது என்று எந்த நேரத்திலும் வந்தவருக்கு உணவு விட்டு மகிழ்ந்தவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது அவருக்கு.
விஜயகாந்த் மறைவுக்கு பா.ஜ.க சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். என்று பேசினார்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe