ஒரே நாளில் 1247 பேருக்கு கொரோனா தொற்று.மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல்

published 2 years ago

ஒரே நாளில் 1247 பேருக்கு கொரோனா தொற்று.மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

இந்தியாவில் 1247 பேருக்கு கொரோனா பாதிப்பு..!ஒருவர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தகவல்.

கொரோனா தொற்றை கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள மேற்கொண்டு வரும் நிலையில் திதாக உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸால் மக்கள் அச்சத்திலேயே உறைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் அதை முழுமையாக அழிக்கமுடியாத சூழலே நிலவுகிறது. தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருக்க கூடிய நிலையில், உலக நாடுகள் பலவற்றில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது.

இந்தச் சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள செய்தி குறிப்பில் நேற்று கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிர் இழந்துள்ளதாகவும் 928 பேர் குணமடைந்து உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது.

நேற்று 2 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,247 ஆகக் குறைந்துள்ளது.இதுவரை மொத்தம் 4,25,11,701 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe