CRPF பயிற்சி மையத்தில் 95-வது பேட்ச் பயிற்சி நிறைவு...

published 1 year ago

CRPF பயிற்சி மையத்தில் 95-வது பேட்ச் பயிற்சி நிறைவு...

கோவை: கோவை தொப்பம்பட்டியில் உள்ள மத்திய காவலர் பயிற்சி கல்லூரியில் மத்திய கமாண்டர் படை வீரர்கள்,சப் இன்ஸ்பெக்டர் தரவரிசை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதில் மத்திய அரசு இந்திய ராணுவ படையினர் போன்று சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் உள்ளனர்.

இதன் பயிற்சி மையம் தமிழகத்தில் சென்னை ஆவடி,கோவை இரண்டு இடங்களில் உள்ளது.இதில் கோவை தொப்பம்பட்டியில் உள்ள சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 262 சப் இன்ஸ்பெக்டர் தரவரிசை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்டரல் ரிசர்வ் போலீஸின் 95-வது பேட்ச்,சப் இன்ஸ்பெக்டர்களின் பயிற்சியில் உள் மற்றும் வெளி விளையாட்டு,போர் பயிற்சியாக துப்பாக்கி சுடுதல்,கணினி திறன், என பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி நிறைவு விழாவாக கல்லூரியின் தலைமை அதிகாரி அஜய் குமார், சிறப்பு பயிற்சி அதிகாரி ராஜேஸ் குமார்,சிறப்பு விருந்தினராக CRPF ன் ADGP திலிப்குமார் முன்னிலையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றவர்களின் அணி வகுப்பு மரியாதை செய்தனர்.

இப்பயிற்சியில் சிறப்பாக செயல் பட்ட ரவிக்குமார் யாதவ்,அருண், விக்ரம் தயா,அருண்,பிரியா சர்மா, நிக்சன் தயா,அஜய் பரதன் ஆகியோர்களுக்கு முப்படை தளபதி அபினந்தன் நினைவாக கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
     
தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் மையத்தில் கமாண்டோ பயிற்சி   பெற்று வரும் வீரர்களின் சாகச விளையாட்டில் ஈடுப்பட்டு  பார்வையாளர்கள் கவர்ந்தனர்.

நிகழ்ச்சியை சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்ற குடும்பத்தினர், உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe