கோவையில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் அபேஸ்..!

published 2 years ago

கோவையில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் அபேஸ்..!

கோவை,ஜூலை.1- கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தைச் செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. உடனடியாக பணத்தைச் செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நடராஜன் அந்த லிங்கை அழுத்தினார். பின்னர் அந்த லிங்கிற்கு ரூ.10 முன்பணம் அப்பினார்.அதன் பின்னர் நடராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று தனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தார். அப்போது அதிலிருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த நடராஜன் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலியான லிங்கை அனுப்பி முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 8 லட்சத்து 7 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்கள். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe