கோவை மாநகரில் இந்த ஆண்டு மட்டும் இத்தனை சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளதா- காவல் ஆணையாளர் கூறிய அதிர்ச்சி தகவல்...

published 1 year ago

கோவை மாநகரில் இந்த ஆண்டு மட்டும் இத்தனை சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளதா- காவல் ஆணையாளர் கூறிய அதிர்ச்சி தகவல்...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குற்ற வழக்குகளையும் சட்டம் ஒழுங்கு வழக்குகளையும் பார்க்கும் பொழுது கடந்த வருடத்தை விட இந்த வருடம் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாகவும் குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள், அதை நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், நம் கோவை நம் பாதுகாப்பு என்ற டேக் லைன் மூலம் தெருக்களில் உள்ள வணிக நிறுவன மக்களை அணுகி சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் Hot Spot என்ற சட் ஒழுங்கு பிரச்சனைகள் பதிவான இடங்களை ஆய்வு செய்து அந்த இடங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியதன் மூலம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

சாலை விபத்துகளை மீறுபவர்கள் மீது பதியப்படும் வழக்குகள் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும் கூறிய அவர் ஆனால் அபராதம் விதிப்பை பொருத்தவரை கடந்த ஆண்டு 9 கோடி இருந்த நிலையில் இந்த ஆண்டு 10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கஞ்சா குட்கா போன்ற வழக்குகளை பொருத்தவரை பல்வேறு இணைந்து செயல்பட்டதன் அடிப்படையில் 63 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் லாட்டரி வழக்குகளும் இந்த ஆண்டு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சைபர் கிரைம் வழக்குகளை பொருத்தவரை இந்த ஆண்டு மட்டும் 6248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 4276 வழக்குகள் பணம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளடக்கியது எனவும் 1972 வழக்குகள் இதர சைபர் கிரைம் வழக்குகளாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதில் 201 FIR போடப்பட்டு 46 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 28 கோடி பணத்தை குற்றவாளிகள் கையில் சென்று சேராமல் தடுத்துள்ளதாகவும் அதில் இரண்டு கோடி ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கோவை மாநகரில் இந்த ஆண்டு 2300 சிசிடிவி கேமராக்கள் புதிதாக போடப்பட்டிருப்பதாகவும் இவை அனைத்தும் சாலைகளை நோக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் குற்றங்களை தடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார். போலிஸ் அக்கா என்ற திட்டத்தின் கீழ் முன்னுருக்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போலிஸ் Bro என்ற திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் 326 மாணவர்களை ஆபரேஷன் ரீபூட் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புகளை மீண்டும் தொடர செய்துள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe