2023 ஆம் ஆண்டின் அதிக வசூல் மற்றும் மாபெரும் ஹிட்டான தமிழ்ப் படங்களின் தொகுப்பு..!

published 1 year ago

2023 ஆம் ஆண்டின் அதிக வசூல் மற்றும் மாபெரும் ஹிட்டான தமிழ்ப் படங்களின் தொகுப்பு..!

சென்னை: 2023 ஆம் ஆண்டின் அதிக வசூல் மற்றும் மாபெரும் ஹிட்டான தமிழ் திரைப்படங்களை பார்க்கலாம்.

லியோ

தமிழ் சினிமாவில் தற்போது அதிகப்படியான ரசிகர்களையும்,  முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் லோகேஷூடன் இணைந்த காரணத்தினாலும், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

லோகி யூனிவெர்சில் அங்கமாக எதிர்பார்க்கப்பட்டு நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘லியோ. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.650 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனால்,  படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. வசூல் ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும், விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் சில விமர்சனத்தைப் பெற்றது.

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது ஜெயிலர் திரைப்படம். இந்த படத்தில் பல மொழிகளில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.  அந்த வகையில் மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் குணச்சித்திர வேடங்களில்  நடித்திருந்தனர். 

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில்  பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் பெரியளவில் ஹிட் ஆகின. ஜெய்லர் உலகளவில் திரைப்படம் ரூ. 615 கோடி வசூல் செய்து உள்ளது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 1 படத்தின் தொடர்ச்சியாக, மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்தபடியே நல்ல  வரவேற்பை பெற்றது.. இந்த படம் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடி வசூல் செய்து உள்ளது.

வாரிசு

இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜு படத்தைத் தயாரிக்க, 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இணைந்து படத்தை வெளியீடு செய்தது. வாரிசு படம் உலகம் முழுவதும் ரூ.300க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

துணிவு

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படத்தில் பல மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோகைன், வீரா, ஜிஎம் சுந்தர், தர்ஷன், பிரேம்குமார், மகாநதி சங்கர், மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

நடிகர் அஜித்குமார், இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில்  மூன்றாவது திரைப்படம் ஆகும். துணிவு படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும்  குட் நைட், டாடா, அயோத்தி போன்ற மிக நல்ல படங்களும் மக்களில் மத்தியில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் இணையான வரவேற்பை பெற்றது.

2023 இன் தமிழ் திரைப்படங்களின் டாப் 10 லிஸ்ட்

• லியோ

• ஜெயிலர்

• பொன்னியின் செல்வன் 2

• வாரிசு

• துணிவு

• மார்க் ஆண்டனி

• மாமன்னன்

• மாவீரன்

• ஜவான்

• ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe