2024 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி...

published 1 year ago

2024 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி...

கோவை: 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளின் துவக்க விழா நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான லோகோ அண்மையில் வெளியிடப்பட்டது. மேலும் இது குறித்து பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் PSG மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போட்டிகள் குறித்து கோவை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் துவக்க நிகழ்ச்சி பந்தய சாலை பகுதியில் உள்ள மீடியா டவர் அருகில் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதில் தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உட்பட பலவை  இடம்பெற்றன. மேலும் மீடியா டவரிலும் கேலோ இந்தியா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe