வஉசி பூங்காவில் இருந்த மேலும் சில பாம்புகள் பிடிக்கப்பட்டு சிறுவாணிக்கு கொண்டு செல்லப்பட்டது…

published 1 year ago

வஉசி பூங்காவில் இருந்த மேலும் சில பாம்புகள் பிடிக்கப்பட்டு சிறுவாணிக்கு கொண்டு செல்லப்பட்டது…

கோவை: மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வஉசி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வஉசி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான்,  குரங்குகள், பாம்புகள் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்களை  வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் சில பாம்புகள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. வஉசி பூங்காவில் இருந்த 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடிவிரியன், 4 சாரைப்பாம்பு ஆகியவை பெட்டிக்குள் அடைத்து 
வனத்துறை வாகனம் மூலம் இடமாற்றம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.

கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும்  வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் இந்த பாம்புகள் பிடிக்கப்பட்டன.

பாம்பை அவர்கள் பெட்டிக்குள் அடைக்கும்போது அந்தப் பாம்புகள் மிகவும் கோபத்துடன் சீறியது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe