மாதம் ரூ.1000 வழங்கும் மற்றொரு திட்டம்.. தமிழக அரசின் அடடே திட்டம் இது... நீங்களும் விண்ணப்பியுங்கள்!

published 1 year ago

மாதம் ரூ.1000 வழங்கும் மற்றொரு திட்டம்.. தமிழக அரசின் அடடே திட்டம் இது... நீங்களும் விண்ணப்பியுங்கள்!

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. யாருக்கு எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, இன்னும் வேலை கிடைக்காத நிலையில் அதனைத் தொடர்ந்து புதுப்பித்து வருவோர்க்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.600, பட்டம் பெற்று பணி கிடைக்காத மாற்றுத்திறனாளிக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர உதவித்தொகைக்காக வேலை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால், பலருக்கும் இது தெரியாததால் யாரும் விண்ணப்பிக்க முன்வருவதில்லை.

என்ன தகுதி?

இந்த உதவித்தொகை தேவைப்படுவோர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பித்து குறைந்தது ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை 45 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 40 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு மாவட்டந்தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை உடனே அணுகலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe