கல்யாணம் பண்ணிக்கனும்னு வீடு தேடி வந்துட்டார்... போட்டு உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

published 1 year ago

கல்யாணம் பண்ணிக்கனும்னு வீடு தேடி வந்துட்டார்... போட்டு உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

சென்னை: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் "இது என்ன மாயம்" என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சர்க்கார் என்று அடுத்தடுத்து இவருக்கு அமைந்த படங்கள் கீர்த்தி சுரேஷை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாற்றியது. தொடர்ந்து இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "நடிகையர் திலகம்" என்ற படத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இந்த சூழலில் கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் விஜய் உடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

விஜயின் வீட்டு அருகில் அவரது நண்பர் வீட்டு மாடியில் தங்கி இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. அவருக்காகவே விஜய் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வருவதாகவும், இது பிடிக்காமல் தான் விஜயின் மனைவி சங்கீதா கோபித்துக் கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த கிசுகிசுக்களை எல்லாம் இரு தரப்பும் காதில் போட்டுக்கொள்வதாய் இல்லை.

இதனிடையே பேட்டி ஒன்றில் தன்னை திருமணம் செய்து கொள்ள வீடு தேடி சிலர் வருவதாகத் தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது "என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ஒருவர் தனது பெயர், முகவரியுடன் தொடர்ந்து எனக்கு கடிதம் அனுப்பிக்கொண்டே இருந்தார். அந்த கடிதத்தில் என்னிடமிருந்து அவர் பதிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் அவர் என் வீடு தேடி வந்து விட்டார். அப்போது நான் வீட்டில் இல்லை. வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். அவர்களிடம் "கீர்த்தி எதற்காக இந்த படம் எல்லாம் பண்ணுறா? ஏன் அந்தப் படம் எல்லாம் பண்ணுறா? என்று கேட்டுள்ளார்.

ஏதோ நான் அவரது மனைவி போல் உரிமையுடன் பேசிவிட்டு போய்விட்டாராம் என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe