டெல்லியில் குடியரசு தினவிழாவில் வி.வி.ஐ.பி., வரிசையில் அமரப்போகும் கோவையை தம்பதி..! என்ன காரணம்?

published 1 year ago

டெல்லியில் குடியரசு தினவிழாவில் வி.வி.ஐ.பி., வரிசையில் அமரப்போகும் கோவையை தம்பதி..! என்ன காரணம்?

கோவை: நம் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்  தலைநகர் டெல்லியில்   நடைபெற உள்ள நிலையில் கோவை வால்பாறையை சேர்ந்த காடர் பழங்குடியின தம்பதிகளான ராஜலட்சுமி - ஜெயபால்‌ ஆகியோர் வி.வி.ஐ.பி.,க்கள் பிரிவில் கலந்து கொள்ள டெல்லி செல்ல உள்ளனர். ராஜலட்சுமி தங்களது பழங்குடியின இனத்தவர்களின் உரிமைக்காக அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களின் நில உரிமைக்காக  அறவழியில் போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

ராமலட்சுமியின் இந்த உரிமை போராட்டத்திற்கு அவரது கணவர் ஜெயபால் உறுதுணையாக இருந்து வழி காட்டியுள்ளார். இதைச் செயலை பாராட்டும் விதமாக, இந்த 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் இந்த தம்பதி கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

அதன்படி ராஜலட்சுமி- ஜெயபால் தம்பதி வருகிற 22-ம் தேதி விமானம் மூலம் டெல்லி சென்றுவிட்டு குடியரசு தின  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மீண்டும் பிப்ரவரி 2-ம் தேதி வால்பாறை திரும்புகின்றனர்.

மிக மிக முக்கியஸ்தர் (VVIP) பிரிவில் தம்பதி கலந்து கொள்வதற்கான காரணம்:

கடந்த 2019ஆம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் காடர் பழங்குடியின மக்களின் வீடு சிதைந்துவிட்டன.

காடர் இன மக்கள் தங்களது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, வனத்தில் கிடைத்த இடத்தில் குடியேறிய அவ்வின மக்களை, வனத்துறையினர் வனச்சட்டத்தை சுட்டிக்காட்டி வெளியேற்றினர். அவர்களை அதிகாரிகள் அரசு தேயிலைத் தோட்ட  தொழிலாளர்களுக்குக்  கட்டிக் கொடுத்த லைன் வீடுகளில் குடியமர்த்தினர். எனவே அவ்வின மக்கள் அங்கிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ராஜலட்சுமியின் வழிகாட்டலின் பேரில் காடர் இன மக்கள் அறவழிப் போராட்டம் நடத்தினர்,அவர்கள் அரசு அதிகாரிகளிடம் ஏராளமான மனுக்கள் கொடுப்பதன் வழியாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த அறவழி போராட்டங்களை முன்னின்று நடத்திய ராஜலட்சுமிக்கு அவரின் கணவர் ஜெயபால் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலம் உறுதுணையாக நின்றனர். தமிழக அரசு இவர்களின் உரிமை போராட்டத்திற்கு அசைந்து கொடுக்காவிட்டாலும் அவர்கள் வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி தங்களது பூர்வீக மலைக்குக் குடியேறினர்.

இவர்களின் போராட்ட குணம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது, அதுமட்டுமின்றி இது அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்தது, ஆகையால் காடர் இனமக்களுக்கு அவர்களின் சொந்த இடத்திற்கே அரசாங்கமும் பட்டா வழங்கியது. இந்த மகத்தான போராட்டத்தை முன்னெடுத்து, உரிமைகளை மீட்டவர்களான ராஜலட்சுமி- ஜயபால் தம்பதிகளுக்கு அரசு வழங்கியுள்ள இந்த கௌரவம் காடர் பழங்குடியின மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe